சென்னை: மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள நோயாளிகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக பதவி ஏற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மத்தியஅரசு கொடுத்து வந்த தொடர் அழுத்தம் காரணமாக, தற்போது, தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னிலிருந்து 650 மெட்ரிக் டன்னாக மத்தியஅரசு அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் வழங்குவதில் மத்தியஅரசு பாரபட்சம் காட்டியது. முதலில், 146மெட்ரிக் டன் வழங்கிய நிலையில், பின்னர் அது 220 மெட்ரிக் டன்னா உயர்த்தி ஒதுக்கியது.
இதற்கிடையில் தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுடன் நேரடியாக பேசியதுடன், திமுக நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர்களுடன் பேசச் செய்தார். தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் அது 519 மெட்ரிக் ஆகவும் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன் என்று திருத்தப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு திருத்தத்தின் மூலம், மகாராஷ்டிராவின் டோல்வி நகரில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூவிடம் இருந்து 60 மெட்ரிக் டன் ஆக்சிஜன், முறையே ரூர்கேலா மற்றும் கலிங்க நகரில் உள்ள லிண்டேவிலிருந்து 46 மெட்ரிக் மற்றும் 50 மெட்ரிக் டன்., (ஒடிசா இரண்டும்) மற்றும் 50 மெட்ரிக் டன். இது மாநிலத்தின் தூத்துக்குடியில் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் செப்பு ஆலையிலிருந்து 25 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
மேலும் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக விசாகப்பட்டினத்தை அடைந்து சாலை வழியாக தமிழகத்திற்கும் கிடைக்கும் என்றும் சுகாதார செயலாளர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு ரயில்மூலம் ஒடிசா கலிங்கநகர் பகுதியில் இருந்து ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக, ஆக்சிஜன் கொண்டுவருவது தடைபட்டால், ஜாம்ஷெட்பூர் வழியாக, ரயில் வழியாக ஆக்ஸிஜனைக் கொண்டுவருவதற்கான மாற்றுத் திட்டம் எங்களிடம் உள்ளது, இதற்காக நாங்கள் ரயில்வே அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளோம் என்றும் கூறினார்.