தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்

Must read

மும்பை:
ந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் வரும் 16ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்கிறது.

அதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் பயோ பபுளில் உள்ளனர். மும்பையில் பயிற்சியில் ஈடுபடும்போது ரோஹித் சர்மாவிற்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் பிரியன்க் பன்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

More articles

Latest article