'பாதி நகரமே காலி' இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! (படங்கள்)

Must read

த்தாலியில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதி நகரமே காலியாகி  உள்ளதாக அமட்ரிஸ் நகர மேயர்  தெரிவித்து உள்ளார்.
நிலநடுக்கம் குறித்து, இத்தாலி  அமட்ரிஸ் நகர மேயர்  செர்ஜியோ பெரோஸி  கூ றுகையில்,  ‘பாதி நகரத்தை காணவில்லை’ என்றார். மேலும் அமட்ரிஸ்  நகரம் பெரும் சேதம் அடைந்துள்ளதாகவும், அந்த நகரத்துக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்து உள்ளதாகவும், அமட்ரிஸ்நகரம் பாதி சேதமடைந்து உள்ளதாகவும்,  நகரமே சீர்குலைந்து உள்ளதாகவும், பாலங்கள் அனைத்தும் உடைந்து நொறுங்கியுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்   மேயர் செர்ஜியோ பெரோசி கூறினார்.
மீட்பு படையினர் அந்த நகரத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோம் நகரில் பலமாடி கட்டிடங்கள் சுமார் 20 நிமிடங்கள் அதிர்ந்தாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை   கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டதாக அக்குமோலி டவுன் மேயர் ஸ்பெனோ பிட்ருசி தெரிவித்து உள்ளார். டோரண்டோ அருகில் உள்ள பெஸ்காரா டெல் என்ற கிராமத்தில் 2 பேர் இற்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 6 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சொல்கிறது.
நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாகவும்,  அதைத் தொடந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கஙக்ள் ஏற்பட்டதாகவும் இத்தாலி பிரதமர் அலுவலகம் செய்தி கூறுகிறது.
இந்த சக்திவாய்ந்த  நிலநடுக்கத்தால் வரலாற்று சின்னங்கள், கட்டிங்க்ள் சேதமடைந்துள்ளதாக வும், மேலும் காயமுற்றவர்கள் பற்றிய விவரஙக்ள் தெரியவில்லை என்றும் பிபிசி தெரிவிக்கிறது.
ஏற்கனவே இத்தாலி தலைநகரில்  2009ல்,  6.3 ரிக்டர் அளவுகோல் கொண்ட   கடுமையான நிலநடுக்கத்தன்போது   300 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
_90895228_65d897ca-c29b-4a5d-a6e0-530f2262ec67
italin_90894983_mediaitem90894982_90894909_mediaitem90894908_90895187_mediaitem90895186_90894955_mediaitem90894954_90894569_mediaitem90894568

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article