சன்டிகர்:

டை செய்யப்பட்ட தற்போதைய ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக  (முன்னாள் லஷ்கர் இ தைபா) உள்ள ஹபீஸ் சயீத்  பஞ்சாப் மாநில பயங்கரவாதத் தடுப்பு  காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியும், தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் தலைமறைவாக வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்த பேரணி ஒன்றில் பேசியபோது, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், ஆனால்  நான் காஷ்மீர் மக்களுக்காக போராடுவதை நிறுத்த மாட்டேன். எங்களை அடக்க நினைத்தால் மேலும் பலத்தோடு மீண்டு வருவோம் என்று மிரட்டியிருந்தார்.

இவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம்,   ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான அப்துல் ரகுமான் மக்கி பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத் பஞ்சாபின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் உடடினயாக நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படும் காட்சி வீடியோ….