கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஹதியா, 2016 ம் ஆண்டு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்து மதத்தை சேர்ந்தவரான இவர் தனது காதலுக்காக இஸ்லாமிய மதம் மாறி திருமணம் செய்து கொண்டார், ஆட்கொணர்வு மனுவில் தொடங்கி, ‘லவ் ஜிஹாத்’ காதலுக்காக மத மாற்றம் என்று உச்ச நீதிமன்றம் வரை பரபரத்தது இவரது காதல்.

மகளை காணவில்லை என்று காவல் துறையில் புகார் கொடுத்து இவரது காதலுக்கு எதிர்ப்பு காட்டி போராடி வந்தனர் இவரது தந்தை அசோகனும், தாய் பொன்னம்மாவும்.

ஹதியா, பொன்னம்மா, அசோகன்

அது அப்போது…..சமீபத்தில், மகள் ஹதியா-வின் கிளினிக்கிற்கு சென்று அவருடன் சகஜமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இது இப்போது.

மதமாற்றம், காதலுக்கு எதிர்ப்பு என்று இந்தியாவையே பரபரக்க வைத்தவர், தற்போது தனது படிப்பை முடித்து மருத்துவராகி, தனது குடும்பம் மற்றும் தன் பெற்றோருடன் சமாதானமாகி வாழ்ந்துவருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மகளின் காதலுக்கு மட்டுமல்ல மகளின் மீது பெற்றவர்களுக்கு உள்ள காதலுக்கும் மரியாதை கிடைத்திருக்கிறது.