சுற்றுப்பயணம் நிறைவு – இந்தியாவிற்குப் புறப்பட்டார் மோடி

Must read

நியூயார்க்: 
.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கப் பயணம் சென்றிருந்த மோடி சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை அடுத்து இந்தியாவிற்குப் புறப்பட்டார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் உரையாற்றப்  பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த 22-ந்தேதி காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இன்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் அவர் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து அவர் பேசினார்.

இந்த கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, இன்று இரவு நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து விமானத்தில் இந்தியாவிற்குப் புறப்பட்டார்.

More articles

Latest article