ஐதராபாத்:  கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது அண்ணனும், மூத்த காங்கிரஸ் தலைவரும், காந்தியவாதியுமான  குமரி அனந்தன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

“காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் உடல்நலப் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது இறந்த செய்தி, தற்போது தனது மகள் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஐதராபாத்தில் உள்ள அவரது சகோதரர் குமரி அனந்தனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த குமரி அனந்தன் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.  இதையடுத்து, அவர் ஐதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.