இந்து கோவில்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்க: எச்.ராஜா வலியுறுத்தல்

Must read

இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்து கோவில்களில் உள்ள சிலைகள் ஆபாசமாக இருப்பதாகவும், கூம்பு வடிவல் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமான சிலைகளை கொண்டிருந்தால் அது கோவில் என்று பேசியிருந்தார். இதற்கு சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் பதிவாகியிருந்தது.

https://twitter.com/HRajaBJP/status/1196661837648912384

இத்தகைய சூழலில், இது தொடர்பாக தனது கருத்துக்களை பதிவிட்டுள்ள எச்.ராஜா, “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலகளை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article