சை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து மணந்தார். கடந்த 2013ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. சென்ற மாதம் இந்த இசை தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை தெரிவித்த போதும் குழந்தை படத்தை வெளியிடவில்லை.


குழந்தைக்கு அன்வி என பெயரிட்டதாக கூறப்பட்டது. தற்போது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இதோ எங்கள் இளவரசி’ என்ற கேப்ஷனுடன் குழந்தை படத்தை வெளியிட்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ். படத்தை பார்த்த ரசிகர்கள், பாப்பா ரொம்ப அழகு திருஷ்டி சுற்றிப் போடுங்கள் என்றும், உண்மையில் இளவரசிதான் என ரசிகர்கள் ஜிவிபிரகாஷுக்கு பாராட்டு என தெரிவித்திருக்கின்றனர்.


ஜிவி பிரகாஷ் தற்போது 9 படங்களில் நடிக்கிறார், தவிர தலைவி, சூரரரைப்போற்று படங்களுக்கு இசை அமைக்கிறார். கொரோனா முடிந்த பிறகு பிரகாஷ் படம் வெளியாக உள்ளது.

[youtube-feed feed=1]