கடந்த 8 ஆம் தேதி வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் அஜித் ரசிகர்களில் சிலர் இப்படத்தை ஏற்றுக்கொண்டாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்திலே இரண்டாம் பாதி முழுவதும் முடிவதும் ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.
டிரைலரில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை பார்த்து, படத்திலும் மாஸான சண்டைக்காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு, அவை இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்த நிலையில், திரையரங்கம் ஒன்றில் ’நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்த ரசிகர் ஒருவர் திரையரங்கிலே சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel