சென்னை; மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் குட்கா-பான் மசாலா தடை உத்தரவை ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றல் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மறைந்த ஜெயலலிதா முதலாமைச்சராக இருந்தபோது, கடந்த 2018ம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவு ஓராண்டு மட்டுமே செல்லும் என்பதால், தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, னியார் புகையிலை நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வாக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு காரணமாக, குட்கா விவகாரத்தில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நீர்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர்தநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.