சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முறைகேடாக குட்கா, லாட்டரி விற்பனை செய்ததாக 2,983 பேர் கைது! செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், லாட்டரிகளை, பலர் முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர். இதை ஒடுக்க தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் போலீசார் குட்கா பதுக்கி வைத்திருந்தவர்களை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக  தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 8 நாட்களில் குட்கா பதுக்கி வைத்திருந்ததாக 2,983 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 2,940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 3,818 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்ததாக 154பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.