ஸ்லாமிய கல்லறையை இந்து கோயில் என படத்துடன் தவறுதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தியை இம்பொடணட் என்று அவர் கூறிய வார்த்தைகளாலேயே வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

டி.டி.வி.தினகரன் மீது காலம் கடந்து நடவடிக்கை எடுத்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஆகியோரை (“இம்பொடண்ட்” ) என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார் ஆடிட்டர் குருமூர்த்தி.

“இம்பொடண்ட் என்றால் ஆண்மையற்றவர்கள் என்று பொருள். ஒரு வார இதழின் ஆசிரியராகவும் இருக்கும் குருமூர்த்தி இப்படி தரம் தாழ்ந்து விமர்சிக்கக்கூடாது” என்று பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

குருமூர்த்தி

ஆனால் தான் மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்று தெரிவித்த குருமூர்த்தி “இம்பொடண்ட்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தார்.

அதில், “Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையானது impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது.  நான் Twitter எழுதியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி ட்விட்டரில் போட முடியாது

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்று பதிவிட்டார்.

குருமூர்த்தியின் ட்விட்டர் பதிவு

இந்த நிலையில் நேற்று இரவு 11.51 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களை  பதிவிட்டார் குருமூர்த்தி.

அதன் கீழ், “ ராமேஸ்வர கோயிலின் அருமையான கட்டிடக்கலை” என்று வியந்து பதிவிட்டிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் நெட்டிசன்கள் பலர், “குறிப்பிட்ட படங்கள், ராமேஸ்வர கோயில் அல்ல. உ.பி. மாநிலத்தல் உள்ள இஸ்லாமிய கல்லறை. அங்கு 51 தூண்கள் மட்டும உண்டு. ஆனால் ராமேஸ்வரத்திலா 1212 தூண்கள் உள்ளன.

அந்த இஸ்லாமிய சமாதியின் படம்

இதைக்கூட அறியாமல் மாற்றி பதிவிட்டிருக்கிறாரே இம்பொண்ட் குருமூர்த்தி.  இவர்தான்  சென்னையில்   வருடாவருடம்   “இந்து ஆன்மிக மற்றும் சேவைகண்காட்சி”யை நடத்துகிறார்.  இதை நடத்தும் அமைப்பின் டிரஸ்டி இவர். அந்த கண்காட்சியிலும் மாற்றி புகைப்படத்தை வைத்துவிடப்போகிறார்” என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “குமூர்த்தி சொன்னது போலவே இம்பொடண்ட் என்ற வார்த்தைக்கு (இடத்தை.. படத்தை) அறியாத திறனவற்றவர் என்கிற அர்தத்த்திலேயே சொல்கிறேன்” என்றும் பலர் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.

இம்பொடண்ட் (திறனவற்றவர்!) என்ற வார்த்தை குருமூர்த்தி மீது பூமராங்காக திரும்பியிருக்கிறது.