சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி வேதக்கல்வி நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 112 அடி உயர சிவன் சிலையும் உள்ளது. இதைக்காணவும், இங்கு தங்கியிருந்து பயிற்சி பெறவும் உலகம் முழுவதும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். அதேவேளையில் ஈஷா யோகா மையம் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் குரு-சிஷ்ய பரம்பரையின்படி சில குழந்தைகளுக்கு வேதக் கல்வி கற்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,
2016 ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியதில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதன் மூலம் நடத்தப்படும் குருகுலப் பள்ளிகளில் ஏதேனும் குழந்தை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, ஈஷா யோகா மையத்துக்கு சம்மன் அனுப்பவும், குரு-சிஷ்ய பரம்பரையின்படி சில குழந்தைகளுக்கு வேதக் கல்வி கற்பிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.