திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

நவக்கிரகங்களில் முக்கிய கிரகம் மற்றும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் இன்று இரவு 9.40மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். இதையொட்டி குருபரிகார தலமாக விளங்கும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தழுளியுள்ள குருபகவானுக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நேற்றிரவு தொடங்கின. தொடர்ந்து முதல்கால யாகபூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைனில் பதிவுசெய்யும் பக்தர்கள் மட்டும் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்