காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ந்தேதி நடைபெறும் 89சட்டமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 இடங்களில் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம்  முடிவடைகிறது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் நா 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்மாதிரியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மொத்தமுள்ள  182 தொகுதிகளில், முதல்கட்ட தேர்தல்  டிசம்பர் 1ஆம் தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 5 தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதி களில் டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் உச்சகட்ட பிரச்சாரம் நடந்த நிலையில், இன்றுடன் அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

குஜராத்தில் வழக்கமாக பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது. ஆட்சியினைப் பிடிக்கும் கனவில் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருவதால் குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்கு வேட்டையாடி வருகிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மொத்தம் இந்த தேர்தலில் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலின் போட்டியிடும் 1621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.