குஜராத் : முதல் கட்ட ஊரடங்கு நிவாரண நிதி ரூ.1000க்கு இன்னும் காத்திருக்கும் கட்டுமான தொழிலாளர்கள்

Must read

கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் 40% கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ஊரடங்கு நிவாரண தொகை ரூ. 1000 இன்னும் அளிக்கப்படவில்லை.

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போல் கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகிறது.   இங்கு நேற்று வரை சுமார் 58000 பேர் பாதிக்கப்பட்டு 2300க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42514 பேர் குணம் அடைந்துள்ளனர்.   கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த மார்ச் மாதம் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது குஜராத் அரசு இங்குப் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 1000 ரொக்கத் தொகை வழங்க உள்ளதாக அறிவித்தது.   இந்தத் தொகை அந்தந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்தது.   தற்போது முதலாம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில் சுமர் 40% தொழிலாளர்களுக்கு இந்த தொகை இன்னும் வழங்கப்படாதது தெரிய வந்துள்ளது.

இது குறித்து குஜராத் கட்டுமான தொழிலாளர்கள் வாரிய செயலர் பிரஜாபதி, “எங்களிடம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு குறித்த சரியான விவரங்கள் இல்லை.   நாங்கள் முதல் கட்டமாக மொத்தமுள்ள 6.38 லட்சம் தொழிலாளர்களில் 4.5 லட்சம் தொழிலாளர்களின் கணக்குகளுக்கு இந்த தொகையை மாற்றத் திட்டமிட்டோம். ஆனால்3 3.68 லட்சம் கணக்குகளுக்கு மட்டுமே மாற்ற முடிந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் 2.7 லட்சம் தொழிலாளர்களுக்கு இன்னும் உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படாமல் உள்ளது., இதற்கு முக்கிய காரணமாகப் பல கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதது எனச் சொல்லப்படுகிறது.  ஒரு சில தொழிலாளர்கள் வேறு ஊருக்குச் சென்றதாலும் மரணம் அடைந்ததாலும் பணத்தைச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அவருக்கு மிகவும் செல்லமான மாநிலம் எனவும் கூறப்படுகிறது.   தற்போது மோடியின் டிஜிடல் இந்தியா திட்ட விளம்பரம் பிரபலமாக உள்ள இந்நேரத்தில் சில டிஜிடல் காரணங்களால் விவரங்கள் சரியாக இல்லாமல் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை மூன்று மாதங்களாகியும் கிடைக்காத நிலை உள்ளது.   இதற்கு பல தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article