புதுடெல்லி:
குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. ஆனாலும் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று நண்பகல் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.