மெக்கா

ம்ஜான் விரத நேரத்தில் இஸ்லாமியர்களுடன் உள்ள மாற்று மதத்தினர் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு மாதத்துக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் விரதம் இருப்பார்கள்.   அதன்படி பகள் வேளைகளில் அவர்கள் உணவு அருந்த மாட்டார்கள்.   தண்ணிர் பருகுவதும் அவ்வளவு ஏன் உமிழ்நீரைக் கூட விழுங்க மாட்டார்கள்.   மாலையில் நோன்புத் திறப்புத் தொழுகையை முடித்த பின்னரே உணவு உண்ணுவார்கள்.

இந்த நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதோர் அவர்களுடன் தங்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் இதோ :

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதால் மற்ற \மதத்தோரும்  அவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.   நீங்கள் உணவு உண்ணும் போது அவர்களை உணவு உண்ண அழைக்கக் கூடாது.   மதிய விருந்துகள் எதற்கும் அவர்கள் வர மாட்டார்கள்.  இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் போது அவர்களுடன் கலந்துக் கொள்ள அழைப்பின் அவசியம் கலந்துக் கொள்ளலாம்.

ரம்ஜான் பண்டிகை என்பது மற்ற மத பண்டிகைகள் போல முன் கூட்டியே அறிவிக்கப்படுவது இல்லை. பிறை தெரிவதைக் கொண்டு மத குருமார்கள் அறிவித்ஹ பின்னரே பண்டிகை கொண்டாடப்படும்.  எனவே ஒவ்வொரு வருடமும் பண்டிகை தினத்தில் மாறுதல்கள் உண்டாக அதிகம் வாய்ப்ள்ளது.   எனவே அவர்கள் பண்டிகை குறித்து அறிவிக்கும் வரை விரதம் இருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அத்துடன் பிறையை நேரடியாக காண விரும்பும் இஸ்லாமிய ஊழியர்கள் தங்கள் பணியை விரைவில் முடித்து விட்டு வீடு செல்ல விரும்பினால் தடை விதிக்கக் கூடாது.   அதே நேரத்தில் அவர்கள் உமிழ்நீரை விழுங்குவதும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரு காப்பியாவது சாப்பிடக் கூடாதா என இஸ்லாமியர்களை கேட்க வேண்டாம்.  இதனால் இஸ்லாமியர்கள் இந்த நேரத்தில் சிறிது விலகி இருப்பார்கள்.   அதை பெரிது படுத்த வேண்டாம்.

உடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்க வேண்டாம்.   அது அவர்களை உற்சாகப் படுத்தும்.   அவர்கள் உங்களை தங்களுடன் விரதம் இருக்க அழைக்கவில்லை.   ஆகவே அதில் கலந்துக் கொள்ள வேண்டாம்.   அதில் உடல் பருமனைக் குறைக்க விரும்புவதால் விரதம் இருக்க விரும்புவர்கள் சற்று தள்ளியே இருக்கவும்.  ஏனென்றால் நாள் முழுவதும் விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் விரதம் முடிந்ததும் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவார்கள்.

[youtube-feed feed=1]