பெங்களூரு:

ர்நாடகாவில் ஆட்சி அமைக்க தங்களது கட்சியை கவர்னர் அழைக்காவிட்டால், கவர்னர் மாளிகை முன் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 38 தொகுதிகளில் கைப்பற்றியுள்ள  ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ளது. இதன் காரணமாக 116 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜேடிஎஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் திகழ்கிறது.

ஆனால், கர்நாடக கவர்னரோ ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதன் காரணமாக குதிரை பேரத்திற்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல் கர்நாடக கவர்னரை குமாரசாமி சந்திக்க இருக்கிறார். அப்போது, மீண்டும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

அதையும் மீறி கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காவிட்டால், நாளை கவர்னர் மாளிகை முன்பு  தர்ணா போராட்டம் நடத்த காங்., மதசார்பற்ற ஜனதாதளம்  எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.