சென்னை,
தமிழகத்தில், தடை செய்யப்பட்ட குட்காவை, திருட்டுத்தனமாக விற்பனை செய்ய லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொட்ர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தடையை மீறி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
விற்பனையாளர்களிடம், ரூ.40 கோடி வரை லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டின் முதல்பெஞ்சில் விசாரணை நடைபெற்று வந்தது. பல கட்ட விசாரணையை தொடர்ந்து எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி வழக்கின் இன்றைய விசாரணையின்போது அரசு தரப்பி லும், மனுதாரர்கள் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர் .
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தர விட்டனர்.