3 மாதங்களுக்கு முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி:

3 மாதங்களுக்கு முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி என பல்வேறு விதமான மறைமுக வரிகள் உள்ளன. இந்த வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, ஜூலை 1-ம் தேதி (நாளை) முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடக்கிறது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தின் நடைபெறும் இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி.யை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து 3 மாதங்களுக்கு முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


English Summary
gst council meeting held for 3 months at every first saturday central government announced