க்னோ

நாளை மறுநாள் அதாவது 17 ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் ஜி எஸ் டி குழுக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை அதாவது 17 ஆம் தேதி அன்று லக்னோவில் ஜிஎஸ்டி குழுக் கூட்ட்ம நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிஒல் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக 20 மாதங்களுக்கு பிறகு பங்கேற்க உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று நேரடியாக ஜிஎஸ்ட் குழுக்கூட்டம் நடந்தது. மீண்டும் இப்போது நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி வரி கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியதில் இருந்தே கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான் எரிபொருட்கள் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை.  மத்திய மற்றும் மாநில அரசுகலின் வருவாயை கணக்கில் கொண்டு இந்த முடிவு அப்போது எடுக்கப்பட்டது.

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது உறுபத்தி வரியை உயர்த்தி வருகிறது.  மேலும் மாநில அரசுகளும் வாட் வரி விதிப்பதால் விலை உயர்ந்து மக்கள் இரு அரசுகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.   சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை உய்ரத்தொடங்கியதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் ரூ.100க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

இதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வர பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஆலோசிக்கபடலாமெனக் கூறப்படுகிறது.  மேலும் அத்தியாவசியமான ,மருந்துப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வ்ரி விலக்கு மேலும் தொடரவது குறித்தும் ஆலோசனை நடக்கும் என தெரிய வந்துள்ளது.

இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாதிக்கு மேல் உற்பத்தி மற்றும் வாட் வரிகள் உள்ளன.  இதில் மத்திய அரசு மட்டும் உற்பத்தி வரியாக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.32.80 மற்றும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.31.80 என வசூலிக்கிறது. இதை மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துக் கொள்ளவது இல்லை.  ஆனால் ஜிஎஸ்டி வ்ரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டு வரப்பட்டால் உற்பத்தி வரியை மாநில அரசுடன் 50:50 என்னும் விகிதத்தில் மத்திய அர்சு பகிர வேண்டி வரும்.