டில்லி

ஜி எஸ் டி வரி வருவாய் அதிகரித்தால் 12% மற்றும் 18% ஜி எஸ் டி ஒன்றாக இணைக்கப்படலாம் என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

டில்லி

நாடெங்கும் சீரான வரி விதிப்பு என இந்த வருடம் ஜூலை 1 முதல் ஜி எஸ் டி அறிமுகப் படுத்தப் பட்டது.   அதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.  தற்போது 5, 12, 18 என்னும் சதவிகிதத்தில் ஜி எஸ் டி உள்ளன.  அடம்பபரப் பொருட்கள், மற்றும் சிகரெட் போன்ற பொருட்களுக்கு 28% ஜி எஸ் டி விதிக்கப்படுகிறது.  நேற்று டில்லியில் நடந்த ஒரு மாநட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அருண் ஜெட்லி தனது உரையில், “ஜி எஸ் டி அமுலாக்கத்துக்கு முன்பு நாட்டில் இருந்த வரி விகிதங்களை அடைப்படையாகக் கொண்டு ஜி எஸ் டி வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.  ஆய்வுகள் நடத்தி தற்போது 28% ஜி எஸ் டியில் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சிகரெட் போன்ற பொருட்களை மட்டும் கொண்டு வந்துளோம்.

தற்போது 12% மற்றும் 18% வரிவிதிப்பின் கீழ் உள்ள பொருட்களை ஒரே சதவீதத்தில் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அதாவது தற்போது 12% சதவிகிதத்தில் உள்ள பல அத்யாவசியப் பொருட்கள் 5% ஜிஎஸ்டிக்கு மாற்றி அமைக்கப்படும்.  18% ஜி எஸ் டி வரிவிதிப்பில் உள்ள பொருட்கள் 12% மற்றும் 18% இடையில் உள்ள வரிவிகித்தத்துக்கு மாற்றப்படும்.

அதன் பிறகு 2 அடுக்கு ஜி எஸ் டி முறை மட்டுமே நாட்டில் இருக்கும்.   ஆனால் இவை அனைத்தும் ஜி எஸ் டி வரி வருவாய் அதிகரிப்பதை பொறுத்தே அமைக்கப்படும்.   அரசின் வரி வருவாய் உயர்வு அதிகரிக்கும் கால கட்டத்தைப் பொறுத்தே இந்த மாறுதல்கள் அமையும்” எனக் கூறி உள்ளார்.