சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று (பிப்.,18) வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன். குரூப் 2 மற்றும் 2A தேர்வு தேர்வு தேதிகளை வெளியிட்டார்.
அதன்படி, மே 21ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெறும் என்றும், வருகிற 23ஆம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதிகள் நடைபெறும் என்றும் அறிவித்ததுடன்,. குரூப்-2 தேர்வு தொடர்பான விவரங்கள் TNPSC இணையத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வரும் 23ஆம் தேதி தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும், மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் என்றார்.
தேர்வுகள் மே 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழ் 100 கேள்விகள், ஆப்டியூட் டெஸ்ட் 25 , பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
ஆங்கிலத்தில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், ஆப்டிடியூட் 25 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்றும் கூறினார்.
90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும்
தேர்வுகள் காலை 10 மணிமுதல் பிற்பகல்1 மணி வரை நடைபெற்ற நிலையில் இனி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறும். பிற்பகல் நடைபெறும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை.
மே 21ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும்,
முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் பாலச்சந்திரன் கூறினார்.