டெல்லி: கொரோனா பேரிடர் காலத்திலும் ஜிஎஸ்டியை கடுமையாக வசூலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. கடந்த மே மாதம் ரூ.1,02,709 கோடி ஜிஎஸ்டியால் வசூலாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக வாழ்வாதாரத்தை காப்பாற்றவே பரதவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மோடி அரசோ, மக்களை பற்றி கவலைப்படாமல், வரி வசூலையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கொரோனா மருந்துகள், மருத்துவ உபகரங்களுக்கும் கறாராக வரி வசூலித்து வருகிறது.
அதன்படி கடந்த மாதம் (மே மாதம்) ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மே 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,02,709 மத்திய ஜிஎஸ்டி ரூ.17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.22,653 கோடி,
பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.26,002 கோடி வரி உட்பட இன்டர் ஜிஎஸ்டியாக ரூ.53,199 கோடி வசூலாகியுள்ளது.
செஸ் வரி ரூ.9,265 கோடி( இறக்குமதி மீது விதிக்கப்பட்ட ரூ. 868 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
கடந்த ஆண்டு (2020) மே மாத ஜிஎஸ்டியை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் கடந்த 8 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.