சென்னை: ராஜஸ்தானில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசு வெடிக்க 2மணி நேரம்  அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளர்.

பட்டாசு வெடித்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பசுமை பட்டாசு வெடிக்கவும் காலை, மாலை ஒவ்வொரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால், பட்டாசு தயாரிக்கும் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டு மொத்தமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது ஏற்க முடியாது என்றும்,  உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகிவற்றின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளுக்கு 4 மாநில முதல்வர்களும் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்,  ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோர் கெலாட், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டும் தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை (2 மணி நேரம் மட்டுமே)  வெடிக்கலாம் எனவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு இரவு 11.55 முதல் 12.30  மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்.