சென்னை: 

சென்னையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற இறைச்சி வகைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, சுமார் 600 கிலோ கிராம் தரமற்ற இறைச்சி வகைகளை, பல்வேறு கடைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான இறைச்சி வகைகள், அதாவது 500 கிலோ கிராம் தரமற்ற இறைச்சி வகைகள், சிந்தாரிப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், உணவு பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேஷ்ன் அதிகாரிகள் அளித்த தகவலை தொடர்ந்தே நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் சோதனை நடத்தப்பட்டு 100 கிலோ கிராம் தரமற்ற இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இறைச்சிகள், அதன் நிறம் மற்றும் அமைப்பு மட்டுமின்றி வாசனை ஆகிவைகளில் இருந்து சோதிக்கப்பட்டது. சந்தேகிக்கும் வகையிலான இறைச்சிகள், தரம் தொடர்பான ஆய்வுக்காக வெப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தரமானதாக இருந்த போதும், அரசின் தர குறியிடப்படாத இறைச்சி வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இறைச்சிகள் வெட்டப்பட்ட பின்னர் கார்ப்பரேசன் அதிகாரிகளிடம் இருந்து தர சான்றிதழ் குறியீடு பெறாமல் இருப்பதே காரணமாகும்.

பன்றி இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது, கடையில் இருந்த ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து இந்த கடைகளை சோதனையிட்ட போது, இந்த கடைகள், உரிய வர்த்தக லைசென்ஸ் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சிந்தாதிரிபேட்க்கு கீழ் வரும் ராயபுரம் மண்டலத்தில் சோதனையிட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இறைச்சி வகைகள் அனைத்து தொடர்ந்து சோதனையிட்டு வருகிறோம். இந்த சோதனை சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் மார்க்கெட்டிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றார்.