சென்னை: தமிழன்னை தந்திட்ட தலைமகன்! என மறைந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ஏஐ வீடியோ-வுடன் தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

செப்டம்பர் 15ந்தேதி திமுகவை தொடங்கியவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளாகும். இந்த ஆண்டு அவரது 117வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் திமுக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. மேலும், அரசும் இன்றைய தினம் அவரது சிலைக்கு மரியாதை செய்கிறது.
அந்தவகையில், இன்று வரது திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ?♥ தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்! என்று தெரிவித்துள்ளார்.