துரை தயாநிதி - கருணாநிதி
 தயாநிதி – கருணாநிதி

“திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றுவதற்கு,  கலைஞர் விசுவாசி ஒருவர் கூட தி.மு.க.வில்  இல்லையா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி.
கடந்த ஆண்டு திமுகவிலிருந்து தற்காலிக நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன்  அப்போது திமுக தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்தார்.  சொத்துகுவிப்பு வழக்கில் அப்போது பதவியிழந்து இருந்த ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் இணையும் முடிவுடன் காத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க. தலைமை இவரை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் அதே திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சீட் கொடுத்திருக்கிறது தி.மு.க.
இதை கிண்டல் செய்யும் விதமாகத்தான், “திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றுவதற்கு,  கலைஞர் விசுவாசி ஒருவர் கூட தி.மு.க.வில்  இல்லையா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் துரை தயாநிதி.
அதோடு அனிதா பற்றிய வீடியோ ஒன்றையும் தனது பக்கத்தில் இணைத்திருக்கிறார்.
முந்தைய கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு, தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்தார் கருணாநிதி. இதை கிண்டல் செய்யும் விதமாக, “குவார்ட்டர் கட்டிங்” என்ற பெயரில் படம் எடுத்தார் தயாநிதி.  அந்த தலைப்புக்கு முன்னால் “வ” என்கிற எழுத்தை மட்டும் சேர்த்தி, வரிவிலக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அனிதா ராதாகிருஷ்ணன் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தயாநிதி பதிந்துள்ள  வீடியோ லிங்க்…