க்னோ

த்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் நிலத்தில் பாஜக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவை தற்பொழுது முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கிறது

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நிலங்களை வாங்கி குவித்து வருகின்றதன் பின்னணியில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.  குறிப்பாகக் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. .

முதல் பகுதி ராமர் கோயில் நிர்வாகத்திடம் 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்கப்பட்டுச் சரியாக 19 நிமிடங்கள் கழித்து, இரண்டாவது பகுதி ரவி மோகன் திவாரி என்பவருக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.  அதன் பின்னர் சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து அதே நபர் 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை சுமார் 18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

இவ்வளவு பெரிய தொகை வித்தியாசத்தில் ஒரே மதிப்புள்ள நிலம் எப்படி மிகக்குறுகிய நேரத்தில் விற்கப்படுகிறது?   இந்த நிகழ்வு வெறும் உதாரணம்தான்.  ஆனால் இதுபோல அயோத்தியா பகுதியில் ஏராளமான குளறுபடிகளுடன் நிலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை நேரடியாகச் செய்வது, பாஜகவின் மூத்த தலைவர்களும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் ஆவார்கள். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.