கொல்கத்தா:
மைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உத்தரப்பிரதேச தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசியல் கட்சிகளின் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை உடனடியாகத் தடை செய்யுமாறும், 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் (இசிஐ) அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ், டிசம்பர் 23 அன்று ஜாமீன் மனுவை விசாரித்த போது, ​​தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்தும் பெரிய பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்யாமல், செய்தித்தாள்கள் மற்றும் “தூர்தர்ஷன்” அல்லது தொலைக்காட்சி ஊடகம் மூலம் கட்சிகள் பிரச்சாரம் செய்யுமாறு நீதிபதி யாதவ் கேட்டுக் கொண்டார்.

சரியான நேரத்தில் நிறுத்தப்படாவிட்டால், விளைவு இரண்டாவது அலையை விட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.