மதுரை: மதுரையில்  நாளை  (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து  இன்று இரவு  சிறப்பு ரயில் புறப்படுகிறது.

நாளை மாலை 3 – 8 முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இடையில், மாலை 6 மணிக்கு 5 லட்சம் பேர் ஒன்று சேர்ந்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. இது உலக சாதனையை ஏற்படுத்தும் மாபெரும் நிகழ்ச்சியாகும்.

மதுரையில் ஜூன் 22 நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பணிகள்  முடிவடைந்து, மாநாட்டுக்கு வரும் பக்தர்களை வரவேற்க மாநாட்டு குழுவினர் தயாராக உள்ளனர். இந்த . மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார். மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 இந்த ரயிலானது  இன்று இரவு  இரவு 9:55க்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5:40 மணிக்கு மதுரை சென்றடையும்.

இந்து  முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. இதில் ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி யாகமும், 1008 நாட்டு மாடுகள், 108 குதிரைகள் வைத்து பூஜையும் நடத்தப்பட்டது. இதையடுத்த கொரோனா பரவல் காரணமாக  2023ல் நடக்க வேண்டிய மாநாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து,  இந்த ஆண்டு இந்து முன்னணி மாநாடு, முருக பக்தர்கள் மாநாடாக மதுரையில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை இந்து விரோத போக்கில் தீவிரம் காட்டி வருவதுடன், இந்துக்களை அவதூறாக விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. அதுபோல திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரங்களும் இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,  முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்து முன்னணி மாநாடு,   ‘முருக பக்தர்கள் மாநாடு’எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது.

இதையொட்டி மாநாடு பந்தலில் அறுபடை வீடு முருகன் கண்காட்சி வைக்கப்பட்டு உள்ளது. இதை காண தினசரி பல ஆயிரம் குவிந்து வருகின்றனர். நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில்,  மாநாட்டில் உ.பி. முதல்வர் யோகி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட நாடு முழுவதும் இருந்து சாமியார்கள், மடாதிபர்கள், ஆன்மிகவாதிகள் உள்பட பலரும் கலந்துகொள்ள உள்ளனர். சுமார் 5 லட்சம்பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் , திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அடுத்து 3 நாட்கள் மட்டும் உள்ளதால் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கு அறுபடை வீடுகளின் பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கு உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதால், பாதாம், முந்திரி, வேர்கடலை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் ஜூன் 22 மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் பாட தொடங்கியதும், திரையில் வரிகள் காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் வீடுகளில் இருந்து சரியாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடலாம்.

மாநாட்டிற்கு வருவோர் முன்னதாக பதிவு செய்ய சமூக வலைதளங்களில் ‘க்யூஆர்’ குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இது ஹிந்து முன்னணி சார்பில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.தனது சொந்த வாகனத்தில் வருவோர் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனால், மாநாட்டுக்கு வரும் பக்தர்கள் தனது மாவட்டத்தில் பதிவு செய்து வர வேண்டும். அப்போது தான் மதுரைக்குள் போலீசார் அனுமதிப்பர் என்றார்.

முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி, இன்று மாலை சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மதுரையில்  நாளை (22ந்தேதி)  நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பொதுமக்கள் செல்லும் வகையில்,  சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த ரயிலான இன்று இரவு  இரவு 9:55க்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5:40 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 8:45க்கு திருநெல்வேலி செல்லும்.

அதேபோல, 22ம் தேதி இரவு 9:40 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, நள்ளிரவு, 12:30 மணிக்கு மதுரை வரும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:15 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மாநாட்டிற்கு வரும் முருக பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சாத்துார், கோவில்பட்டியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் வீடியோ: நன்றி தமிழ் ஜனம்