“கருணை” தற்கொலையை அனுமதித்து கனடாவில் சட்டம்

Must read

download (2)
 
ட்டாவா: கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்களின் உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம்  விலக்கிக் கொண்டுள்ளது.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட, தீராத நோயினால் அவதிப்படுவோரை மரணிக்க வைப்பது “கருணைக்கொலை” எனப்படுகிறது. இது சில நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும்,  உலக அளவில் விவாதப்பொருளாகவே  இருந்து வருகிறது.
இந்த நிலையில்,”குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்களின் உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவலாம்” என்று   கனடா நாட்டில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட, இந்த  உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது.  இதைத் தொடர்ந்து  உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டத்துக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் குறிப்பிடும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என்று தெரிவித்தனர்.
இதேபோன்று நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதி அளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இப்போது அந்த நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.
 

More articles

Latest article