நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.

சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் தற்போது ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார்.