டில்லி

பொய் செய்தி பரப்பும் பத்திரிகையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் பல ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பதிவது வழக்கமாகி வருகிறது.   இதற்கு பல முறை அரசு எதிர்ப்பு தெரிவித்தும் இவ்வாறு பதிவது தொடர்ந்து வருகிறது.  இதை ஒட்டி மத்திய அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்  “பத்திரிகையாளர் சங்கம் இன்னும் 15 நாட்களில் இவ்வாறு பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.    முதல் முறை தவறு செய்வோருக்கு பத்திரிகையாளர் உரிமம் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இரண்டாம் முறையின் போது ஒரு வருடத்துக்கு தடை செய்யப்படும்.    மூன்றாவது முறையும் இது போல பொய் செய்தியை பரப்பினால் அவ்வாறு செய்வோரின் பத்திரிகையாளர் உரிமம் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்படும்”  என அறிவிக்கப்பட்டுள்ளது.