உத்தரகண்ட:

கேதர்நாத் கோயில் அருகே இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்தியா விமானப்படைக்கு சொந்தமான எம்-17 ரக  சரக்கு ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது இரும்பு கம்பியுடன் உராய்வு ஏற்பட்டதில் தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அந்த பகுதி மக்கள் மற்றும் போலீசார் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த  விபத்தில் படுகாயமடைந்த விமானி  உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.