சென்னை,

ரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சீருடை மாற்றம் செய்யப்படும் என்றும், 3 வகையான சீருடைகள் வழங்கப்படும் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை எழும்பூரில்  அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை சார்பில் நடத்தப்படும் பண்டைய வரலாறு, தொல்லியல் தொடர் சொற்பொழிவுகள் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3 விதமான சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்,  6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என மூன்றுவிதமான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் , ஒவ்வொருவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும்,  தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்” என்றும், இந்தக் கையேடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என்றும்,  அன்புமணி ராமதாசின்   பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த செங்கோட்டையன், தான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.