புதுடெல்லி:

தனியார் தொலைக் காட்சிகளில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை அநாகரிகமான முறையிலும், தவறாகவும் காட்டக் கூடாது என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், நடன நிகழ்ச்சிகளின் போது குழந்தைகளை நல்ல விதமாக காட்ட வேண்டும்.

சினிமாவில் பெரியவர்கள் ஆடும் நடனத்தை குழந்தைகளை ஆட வைக்கிறார்கள். இது போன்ற அசைவுகள் வயதை பொறுத்தே அமையவேண்டும்.
அநாகரிகமான அசைவுகளுக்கு குழந்தைகளை ஆட வைக்கக் கூடாது.

குழந்தைகளை நடன நிகழ்ச்சிகளின் போது அநாகரிகமாகவும், தவறாகவும் காட்ட வேண்டாம் என அனைத்து தனியார் தொலைக் காட்சிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வன்முறை மற்றும் ஆபாசமான வகையில் குழந்தைகளை காட்டக் கூடாது என விதி உள்ளது. இதனை அனைத்து தொலைக் காட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என இயக்குனர் சுஜித் சிர்கார் கோரிக்கை விடுத்திருந்தார்.

சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில் குழந்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான வழிகாட்டு முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

எந்த ஒரு குழந்தையையும் ஆபாசமாக பேசவோ, அநாகரிமாக காட்டவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.