மேலும் 25விமான நிலையங்கள் விரைவில் தனியார் மயம்: பொதுத்துறைகளை தாரை வார்க்கும் மோடி அரசு!

Must read

டில்லி:

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, ஏற்கனவே சில விமான நிலையங்களை தனியாரிடம் கொடுத்துள்ள நிலையில், 2வது கட்டமாக மேலும் 20 முதல் 25  விமான நிலையங்களை தனியாரிடம் தாரைவார்க்க முன் வந்துள்ளது.

முதல் கட்டமாக லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில்  ஆகிய 6 விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு தாரை வார்த்துள்ள  நிலையில், அடுத்த கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார் மயமாக்க இருப்ப தாக,  இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா தெரிவித் துள்ளார். அதன்படி, ஆண்டுக்கு 10 – 15 லட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article