வெங்காய விலை உயர்வு, :  இந்தியாவுக்கு கை கொடுக்கும் 4 நாடுகள்

Must read

டில்லி

டும் வெங்காய விலை உயர்வை ஒட்டி எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இந்திய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.20லிருந்து ரூ.25 வரை இருந்து வந்தது.  சமீபகாலமாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  பல மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.   இதற்குக் காரணம் நாட்டில் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாடு எனப் பலரும் கூறி வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழையினால் ஏராளமான நிலங்களில் தண்ணீர் தேக்கி வெங்காயம் பயிரிலேயே அழுகி விட்டன.   அத்துடன் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை மழை காரணமாகச் சேமித்து வைக்க இயலாத நிலை ஏற்பட்டது.  இதனால் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு எங்கும் வெங்காயம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாட்டு மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டது.  அதன்படி துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய 4 நாடுகள் இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.   இதில் முதல் கட்டமாக 80 முதல் 100 கண்டெயினர்கள் வரை வெங்காய இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More articles

Latest article