நோயாளிகள் தீண்டத்தகாதவர்கள்?: இப்படியும் ஓர் அரசு மருத்துவர்!
அரசு மருத்துவர் ஒருவர், தன்னைநாடிவரும் நோயாளிகளை தீண்டுவதே பாவம் என்று நினைக்கும் படியாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணாகரம் தாலுகாவை ச்சேர்ந்த சிவக்குமார் என்பவர் பேசும் அந்தவீடியோ காட்சியில் அவர், தெரிவித்திருப்பதாவது:
“என் பேரு சிவக்குமார். பெண்ணாகரம் தாலுகாவை ச்சேர்ந்தவர். நேற்றுமாலை என் மகனை நாய் கடித்துவிட்டது. ஆகவே, ஏரியூர் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு த்தூக்கி ச்சென்றேன். அங்கு ஊசிபோட்டார்கள். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஊசிபோட வேண்டும் என்று கூறினார்கள்.
மறுநாள் என் மகனுக்கு கடுமையான காய்ச்சல். அதே ஏரியூர் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு ச்சென்றேன். அங் குமருத்துவராக இருக்கும் முனுசாமியிடம்ம கனைகாண்பித்தேன். கடுமையான காய்ச்சல் இருப்பதாக கூறினேன்.
அவர் என் மகனைத்தொட்டுக்கூட பார்க்காமல் மாத்திரை எழுதித்தந்தார். அவரிடம், “மகனுக்கு எவ்வளவு ஜூரம் இருக்கிறது என்று பாருங்கள்” என்றேன்.
அதற்குஅவர், “மாத்திரை தான் கொடுக்கிறேன்ல… வேணும்னா பெண்ணாகரம் மருத்துவமனைக்கு கொண்டுபோங்க” என்று அலட்சியமாக கூறினார்.
அவரிடம் வரும் நோயாளிகள் அனைவருக்குமே, என்னவென்று கேட்டு விட்டு மாத்திரை எழுதிக்கொடுத்து மட்டுமே அனுப்புகிறார். என்னநோய், எத்தனை நாளாக இருக்கிறது என்று விசாரிப்பதேஇல்லை. செக் செய்வதும் இல்லை. ஊசிபோடுவதும் இல்லை .மாத்திரை மட்டும்தான். இந்த அரசுமருத்துவரால் மக்களுக்கு எந்தவிதபயனும் இல்லை” என்று அந்தவீடியோவில் குமுறியிருக்கிறார் சிவக்குமார்.
இன்னொரு வீடியோவில், மருத்துவர் சிவக்குமாரிடம், “மகனுக்கு காய்ச்சல் கடுமாயான காய்ச்சல் அடிக்கிறது. தொட்டுக்கூட பார்க்கவில்லை .எவ்வளவு ஜூரம் என்பதைக்கூட செக் செய்யமாட்டீர்களா..“ என்று கேட்கிறார் சிவக்குமார்.
அதற்கு அரசுமருத்துவர் முனுசாமி, “இப்படித்தான் செக்செய்வேன். வேண்டுமானால் புகார் செய்து கொள்ளுங்கள்” என்கிறார் அலட்சியமாக.
மருத்துவரை தெய்வமாக பார்ப்பவர்கள் நம்மக்கள். ஆனால் இந்த மருத்துவரோ நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறார்.
மக்கள் பணத்தில் பணிபுரியும் இந்த அரசுமருத்துவரின் அலட்சியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த அலட்சியமருத்துவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.
[embedyt] https://www.youtube.com/watch?v=ioa05xzCSUs[/embedyt]