சென்னை:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருகிறது. இதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயலாக மாறி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்  கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 11 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 11 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பகல் 12 மணிவரை கனமழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.