ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள்  குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’’..

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ வழங்க ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு செய்திருப்பது, நாடு முழுவதும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு, தான் செய்த சாதனைகள் மற்றும் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் குறித்து ஆன்லைன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 27 அம்சங்கள், அந்த சாதனை பட்டியல் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன.

அதில் ஓர் அம்சம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகிகள் குடும்பம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

என்ன விளம்பரம்?

’’ காஷ்மீரில் உயிர் இழந்த போராளிகளின் குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ வழங்கப்படும். மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் இந்த ‘ஸ்காலர்ஷிப்’’ அளிக்கப்படும்’’ என்ற வாசகம் தான், சர்ச்சைக்குக் காரணம்.

’’இந்தியர்களின் ரத்தம் குடித்த தீவிரவாதிகளின் குழந்தைகளுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ வழங்குவது என்ன நியாயம்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் தியாகிகளின் குடும்பத்தினர்.

’’அந்த அரசு விளம்பரத்தில் அப்பாவி மக்களை வேட்டையாடிய தீவிரவாதிகளை, கொலைகாரர்களை  ’’போராளிகள்’’ என்று  குறிப்பிட்டிருப்பது வேதனை அளிக்கிறது’’ என்று முன்னாள் ராணுவத்தினர் குமுறுகின்றனர்.

‘’ கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு, இந்தியர்களின் ரத்தம் குடித்த தீவிரவாதிகளுக்கு வெகுமதி தருகிறீர்களா?’’ என்றும் அவர்கள் வினா எழுப்பியுள்ளனர்.