மத்திய அரசு 80 ஆண்டுகள் பழமையான சம்பளம் வழங்கல் சட்டம்,1936-இல் சில மாறுதல்களை செய்து அமல்படவிருக்கிறது. இதன்படி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை காசோலையாகவோ அல்லது நேரடியாகவோ வங்கியில் டெப்பாசிட் செய்யலாம் அதற்கு அந்த பணியாளர்களின் ஒப்புதல் கையெழுத்து தேவையில்லை. ரூ 18,000-க்கு குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு இது பொருந்தும். இதுவரை அவர்களுக்கு பணமாகவே ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு இருந்த முறையில் பணியாளர்களின் ஒப்புதல் கையெழுத்து பெற்ற பின்னரே அவர்களுக்கு நிறுவனங்களால் சம்பளத்தை காசோலையாக தரவோ அல்லது வங்கியில் டெப்பாசிட் செய்யவோ இயலும். இனி பணியாளர்களின் ஒப்புதல் கையெழுத்து தேவையில்லை. இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சர் பண்டாரு தாத்ரேயாவால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் நோட்டுத்தடையை எதிர்த்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதால் இது அவசர சட்டமாக கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டுத்தடையை அடுத்து அனைத்து நிறுவனங்களையும் பணமில்லா வர்த்தகத்துக்கு கொண்டுவரும் முயற்சியாக இது முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.
ஆந்திரா, உத்தர்கண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த முறை ஏற்கனவே அமலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Govt Amends 80 Year-Old Law to Allow Electronic Wage Payment