சென்னை:
மிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.