சென்னை: ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல் அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை என விமர்சித்தார்.

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், தொடக்கத்திலேயே தேசிய கீதத்தை பாட வலியுறுத்திய ஆளுநர், ஆனால், அதை ஏற்காமல் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.
இதையடுத்து, ஆளுனர் உரையை படிக்காமல், ஆளுனர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுனர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அச்சிட்டு வழங்கிய உரை மட்டும் பேரவை குறிப்பில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரையை புறக்கணித்தது வருத்தம் அளிக்கிறது. ஆளுநரின் செயல் அரசியலமைப்பை அவமதிக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியதுடன், ஆளுநர் ரவி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். ஆளுநரின் செயலை சட்டமன்றம் ஏற்கவில்லை ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். ஆளுநரின் உரை படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது என்றவர், “சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையை விலக்கும் நடைமுறை தொடர்பாக திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்படும்” – என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]