சென்னை: தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை யில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக கடந்த மாதம் (அக்டோபர்) 29ந்தேதி  செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்து உள்ளர்.

தமிழக்ததில் ஆன்லைன் ரம்பி உள்பட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கும் வகையில்,  தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. தொடர்ந்து,  ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்தார். அந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் இறுதியில், நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தகவல்கள் பரவின.

ஆனால்,  ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இதுதொடர்பாக  ஆளுநர் ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்று கூறியதுடன்,  இன்று அல்லது நாளைக்குள் ஆளுநரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

மேலும், உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு சார்பில்,  சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றதுடன், தமிழ்நாட்டில்  ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.