சென்னை; தமிழகஅரசின் 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்படும் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் பதவி உள்பட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்களை ஆளுநர் ஆய்வு செய்வதாக கூறி ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இது தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முதுநிலை சட்டப்படிப்பு கலந்தாய்வாய் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தி யாளர்களை  சந்தித்தபோது,  ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம் குறித்து ஆளநர் மாளிகை  தரப்பில் எதுவும் விளக்கம் கேட்கவில்லை என்றார்.  ஆனால்,   20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, விளக்கம் அளித்துள்ளோம் என்றவர் ஆளுநரிடம் தமிழகஅரசு, சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு தேவை இல்லை  என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.