சென்னை

மக்கு நடந்தது குழந்தை திருமணம் எனத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறி உள்ளார்.

அவ்வப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆளுநர் ரவியின் இந்து மதம், சனாதனம் பற்றிய கருத்துகள் அரசியல் அரங்கில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில், ஆளுநர் இன்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தற்போது ஆளுநர் மாளிகையில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாகப் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

அப்போது ஆளுநர் ரவி, “நமது வாழ்வில் தோல்வி என எதுவும் கிடையாது . அவை வெறும் சறுக்கல்கள் மட்டுமே. நம்மிடம் மட்டுமே முன்னேற வேண்டும் என்னும் நினைப்பு உள்ளது. சறுக்கல்கள் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

எனது இளம் வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன். எனவே என்னுடைய திருமணம் குழந்தை திருமணம். என் திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். அவர் கல்லூரிக்குச் செல்லவில்லைய்ர்ர் தவிர எனக்குப் பக்க பலமாக இருந்தார்.

இந்த உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்குப் பக்க பலமாக இருந்தார். நான் எங்குச் சென்று திரும்பினாலும் எனது மனைவிதான் எனது பலம். அதைப்போல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.